அய்யா ஒரு ஊர்ல கரையே இல்லாத குளத்துக்கு வாயே இல்லாத குட்த்த எடுத்துக்கிட்டு ராணி தண்ணிக்கு போனாளாம்….அங்கே வேரே இல்லாத அருகம்புல்ல தலயே இல்லாத மானு மேயறத கண்ணே இல்லாத குருடன் பார்த்துட்டு காலே இல்லாத முடவன்கிட்ட சொல்ல அவன் துப்பாக்கி எடுத்து சுட்டான்... குண்டு மான் மேல படாம மான் வயித்தில இருந்து குட்டி மேல பட்டு குட்டி செத்துப் போச்சு....அத எடுத்து கறி கலக்கி சமைச்சு சாப்பிட்டுப் போட்டு தோல காலே இ...ல்லாத பந்தல்ல காயப் போட்டாஙக...அத தலயே இல்லாத பருந்து அடிச்சிக்கிட்டு போக அத காலே இல்லாத முடவன் துரத்திக்கிட்டுப் போனானாம் அப்ப அவன் கால்ல குத்துன கண்டங்கத்திரி முள்ளு தலைக்க்கு மேல வெளிய வர அதுக்கு வைத்தியம் பார்க்க வைத்தியன்கிட்ட போனானாம் அப்ப வைத்தியன் சொன்னானாம் ஆல வேர், அரச வேர், புங்க வேர், புருச வேர், நாக வேர் அஞ்சையும் கைப்படாம பிடுங்கி உரல் படாம இடிச்சு நாக்குப் படாம நக்குடாய்யா இது முத நாள் வைத்தியம்னானாம் கண்டங்க்கத்திரி வேர கைப்படாம பிடுங்கி உரல குப்புற போட்டு இடிச்சி முழங்கையால எடுத்து நக்குடா இது ரெண்டாம் நாள் வைத்தியம்னானாம் இப்படிப்பட்ட வைத்தியம் சொன்ன வைத்தியனுக்கு சன்மானமா ஓட்ட சாக்குல ஒம்பது முழம் உளுந்தழந்து சக்கரமே இல்லாத வண்டில பாரமேத்தி நுண்டி வண்டியோட்ட குருடன் வழி சொல்ல வண்டி பாட்டுக்கு போயிட்டே இருந்துச்சாம்.....ஏதாவது விளங்கிச்சா........?
Subscribe to:
Post Comments (Atom)
0 கருத்துரைகள்:
Post a Comment