றொம்ப நல்லவன்டா இவன்...



றொம்ப நல்லவன்டா இவன்... ( நகைக்க‌ மட்டும்...)
********************************************
நான் கேள்விப்பட்ட கதையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்... சும்மா (யோசித்து) சிரிக்கத்தான்...
--------------------------------------------------------------------------------------
அது கலியுகத்தின் ஆரம்ப பகுதி...

கர்ணனும், துரியோதனனின் மனைவியும் பகடை(?) விளையாடிட்டு இருந்தாங்க... அப்போது அலுவலாக வெளியே சென்றிருந்த துரியோதனன் அரண்மனைக்குள் நுழைகின்றான்.
கணவனை கண்டதும் மரியாதை நிமிர்த்தம் எழுகின்றால் மனைவி...
துரியோதனன் வந்ததை கவனிக்காத கர்ணன், துரியோதனனின் மனைவியின் இடையை பிடித்து அமர்ந்து விளையாடும் படி சொல்லும் பொது... அவள் இடுப்பில் கட்டி இருந்த முத்துமாலை உதிர்கிறது.
உடனே... முத்து மாலைகளை பொறுக்கிய படி, துரியோதனன் கேட்கிறான்... அவற்றை மீண்டும் நூலில் கோர்க்கவா... வைக்கவா என்று...

இது அவர்களின் நட்பின் தூய்மையை கூறுவதற்காக கூறப்பட்ட கதை (?) ...

year 2010...

இதை தொலைக்காட்சியில் பார்த்துகொண்டிருந்த சுஜி இனி தானும் இப்படி தூய்மையாக இருக்க வேண்டுமென்று முடிவெடுத்துக்கொண்டான்...

மறு நாள்...

காலை வழமை மாதிரி வேலைக்கு புறப்பட்டு போனான் சுஜி...
 அன்று அலுவலர்களின் பணிபகிஷ்கரிப்பு என்பதால்... 10 மணிக்கெல்லாம் வீடு திரும்பிவிட்டான்...

வீட்டுக்கு வந்து மனைவியை ஹோலிலோ, கிச்சனிலோ கானாததால்... நேராக ரூமுக்குள் சென்றான்...
அங்கே...
மனைவி உடைகலைந்த‌ படி இருந்தால்... என்ன நடந்தது என்று விசாரித்தான் சுஜி... மனைவி கடுமையான வயிற்று வலி எனக்கூறிக்கொண்டிருக்கும் போதே... அலுமாரிக்குள் சத்தம் கேட்டது...
உடனே... அலுமாரியை திறந்து பார்த்தான் சுஜி...
அங்கு அவன‌து நண்பன் ஹரி ஒழித்திருந்தான்...

சட்டென்று சிவந்து கோரமாக மாறியது சுஜியின் முகம்... அடக்க முடியாத ஆத்திரத்துடன் ஹரியை பார்த்து கேட்டான்...
" நீ எல்லாம் ஒரு நண்பனா??? உனக்கு நான் எத்தனை உதவி செய்திருப்பேன்... என் மனைவி வயிற்று வலியால் துடித்துக்கொண்டிருக்கிறாள்... நீ என்னென்றா... இங்கு வந்து ஒழிந்து பிடித்து விளையாடிட்டு இருக்கிறாய்...???? "

0 கருத்துரைகள்: